உஸமான் (رضي الله عنهஅவர்களின் காலத்தில்

ஹிஜ்ரி 24 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் உமர் (رضي الله عنهஅவர்கள் மரணித்ததன் பின்னால் உஸ்மான் (رضي الله عنهஅவர்களின் ஆட்சி ஆரம்பமாகிய்து. உமர் (رضي الله عنهஅவர்களின் ஆட்சிக்காலத்தில் அதிகமான வெற்றி இஸ்லாமிய சாம்ராஜியத்துக்கு கிடைத்தது. இதனால் இஸ்லாமிய சாம்ராஜியம் பல நாடுகளாக விரிவடைந்தது. அந்த ஒவ்வொரு இடங்களுக்கும் பல ஸஹாபாக்கள் பிரிந்து சென்று அங்குள்ள மக்களுக்கு ஓதுவதும் முறைகளையும், இஸ்லாமிய சட்டங்களையும் படித்து கொடுத்தனர்.

இவ்வாறு மக்கள் ஸஹாபாக்களிடமிருந்து ஓதக் கற்றுக்கொண்டதால் அந்த ஸஹாபாக்கள் குர்ஆன் இரங்கிய 7 முறையில் எந்த முறையில் ஒதினார்களோ அந்த முறைக்கு பழக்கப்பட்டனர். இன்னும் அவர்கள் ஓதும் முறைத்தான் சரி என்று நினைத்தனர். இதனால் உஸ்மான் (رضي الله عنهஅவர்கள் பல முறையில் ஓதப்பட்டுக்கொண்டிருந்த குர்ஆனை ஒரு முறையில் ஓதுவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இப்னு ஷிஹாப் (ரஹ்) முலமாக புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனஸ் இப்னு மாலிக் (رضي الله عنهஅவர்கள் அறிவிக்கின்றார்கள். ஹுதைபதிப்னுல் யமானி (رضي الله عنهஉஸ்மான் (رضي الله عنهஅவர்களிடம் சென்றார். அவ்வேலையில் அவர்அர்மீனியாஎனும் நாட்டை வெற்றி கொள்ளும் விடயத்தில் ஷாம் வாசிகளுடனும், “அஸ்பீஜான்எனும் நாட்டை வெற்றி கொள்ளும் விடயத்தில் ஈராக் மக்களுடனும் யுத்தம் செய்துகொண்டிருந்தார். ஹுதைபதிப்னுல் யமானி (رضي الله عنهஅவர்கள் அங்கிருந்த மக்கள் குர்ஆன் ஓதும் விடயத்தில் கொண்டுள்ள கருத்து வேறுபாடுகளை கண்டு திடுக்கிட்டார். எனவே ஹுதைபதிப்னுல் யமானி (رضي الله عنهஅவர்கள் உஸ்மான்  (رضي الله عنهஅவர்களிடம்அமீருல் முஃமினீனே! யஹூதி நஸ்ரானிகள் அவர்களின் வேதங்களில் கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளதை போல இந்த உம்மத்திலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படமுன்னால் சரியானதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.என்று கூறினார். எனவே உஸ்மான்  (رضي الله عنهஅவர்கள் ஹப்ஸா (ரழி) அவர்களிடம் ஒரு தூதுவரை அனுப்பி அபூ பக்ர் (رضي الله عنهஅவர்களின் காலத்தில் சேர்க்கப்பட்ட குர்ஆனை என்னிடம் அனுப்பி வைய்யுங்கள். நாம் அதனை பிரதி செய்துவிட்டு திருப்பி தருகின்றேன்.என்று கூறினார்கள். அவரும் அனுப்பி வைத்தார்கள். அவர் ஸைத் பின் ஸாபித், அப்துல்லா பின் அல்-ஜுபைர், சயீத் பின் அல்-ஆஸ் மற்றும் அப்துல் ரஹ்மான் பின் அல்-ஹரிஸ் பின் ஹிஷாம்  (رضي الله عنهஆகியோருக்கு பிரதி எடுக்குமாறு கட்டளையிட்டார், மேலும் அதனை அவர்கள் பிரதி எடுத்தனர். உஸ்மான் (رضي الله عنهஅவர்கள் மூன்று பேர் கொண்ட குரைஷிக் குழுவிடம் கூறினார்: குர்ஆனிலிருந்து எதையாவது பற்றி நீங்களும் ஸைத் பின் ஸாபிதும்  (رضي الله عنه உடன்படவில்லை என்றால்; அதை குரைஷியர்களின் மொழியில் எழுதுங்கள். ஏனென்றால் அது ( குர்ஆன் ) அவர்களின் மொழியில் இரக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். பிரதி எடுத்த பின் திருப்பி அனுப்பி விட்டார்கள். ஒவ்வொரு பிரதேசத்துக்கும் அவர்கள் நகலெடுத்தவற்றிலிருந்து ஒரு குர்ஆனை அனுப்பினர். மேலும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள மற்ற குர்ஆன்களை எரிக்கும்படி கட்டளையிட்டார்.