அன்னை உம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா

 மக்காவில் முஸ்லிம்களுக்கு கொடுமையும் அக்கிரமமும் நடைபெற ஆரம்பித்தபோது அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, தாங்கிக்கொண்டு மக்கா குரைஷிகளை  உளவு பார்த்து அவர்களது  திட்டங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு தெரிவிப்பதில் திறம்பட செயல்பட்டார் உம்மு அய்மன் ரலியல்லாஹு அன்ஹா. நீக்ரோ அடிமைப் பெண்ணான இவர்களின் இயற்பெயர் பரிகாவாகும். இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்களின் அடிமையாவார்.

ஆமினா ரலியல்லாஹு அன்ஹா  அவர்கள் தம் மகனான முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அவரின் மாமன்மார்களிடம் காட்டி வருவதற்காக யத்ரிப் (மதீனா) அழைத்துச் சென்ற பொழுது இவரையும் தம்முடன் அழைத்துச் சென்றார்

திரும்பும் வழியில்அப்வா’  எனுமிடத்தில் ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மறைந்துவிடவே அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு அண்ணலாரை பத்திரமாகக் கொண்டு வந்து அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களிடம் ஒப்படைத்தவர்கள் இவர்கள் தான்.

அண்ணலாரை இளவயதில் வளர்த்ததில் இவருக்கும் பங்குண்டு. அண்ணலார் இவர்களை தன் தாயை போன்றே கருதினார். பிற்காலத்தில் அவர்கள் இவரை நோக்கிஎன் தாய்க்கு பின்னர் நீயே என் தாய்என்று நன்றியுணர்வுடன் கூறினார். மேலும் இவரே நம் குடும்பத்தில் எஞ்சியது உறுப்பினர் என்றும் கூறினார். கதிஜா நாயகியை அண்ணலார் திருமணம் முடித்த பின் இவர்களை விடுதலை செய்துவிட்டார். குரைஷிகளின் கொடுமை தாளாது அபீசீனியா சென்றவர்களில் இவரும் ஒருவர். பின்னர் இவர்கள் மதீனா வந்தபோது கஸ்ரஜ் கூட்டத்தை சார்ந்த உபைத் பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை மனம் முடித்து அய்மன் என்ற மகனை பெற்றெடுத்தார்.  இதனால் இவருக்கு உம்மு அய்மன் என்ற பெயர் ஏற்பட்டது.

நபியவர்கள் நற்செய்தி ஒன்று சொன்னார்கள் ;நீங்கள் இறையருள் பெற்றவர்கள்! சொர்க்கத்தில் நிச்சயமாய் உங்களுக்கு இடம் உண்டு உம்மு அய்மன். சுவர்க்கவாசி பெண்ணை திருமணம் செய்து கொள்ள நீங்கள் விரும்பினால் உங்களில் ஒருவர் உம்மு அய்மனை மணமுடித்துக் கொள்ளட்டும். அப்பொழுது உம்மு அய்மன் நாயகி அவர்களுக்கு 50 வயதுக்கு மேல் பொலிவான புற அழகும் அவரிடம் அமைந்திருக்கவில்லை நபியவர்களின் முன் அறிவிப்பையும் உம்மு அய்மன் நாயகி அவர்களின் அகத்தையும் கருத்தில் கொண்டு முன்வந்தார் ஜைத் பின் ஹாரிதா ரளியல்லாஹு அன்ஹு.

அல்லாஹ்வின் தூதரே! நான் உம்மு அய்மனை மணந்து கொள்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறுகிறேன்.வனப்பும், கவர்ச்சியும் அமையப்பெற்ற பெண்களை விட சிறந்தவர் இவர்.

 உம்மு அய்மன் நாயகி அவர்களும் சரி, ஜைத் பின் ஹாரிதா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் சரிநபியவர்களின் வாழ்க்கையில் மிக ஆழமாய் பின்னிப்பிணைந்தவர்கள். 

மக்காவில் குரைஷி கொடுமை முடிவுக்கு வராமல் முஸ்லிம்கள் மதீனாவுக்கு நகர ஆரம்பித்தார்கள். அக்காலகட்டத்தில் ஒரு நாள் தன்னந்தனியாக கால்நடையாகவே கிளம்பிவிட்டார்கள் உம்மு அய்மன் நாயகி அவர்கள். 

உஹதுப்போரில் ஸஹாபா பெண்கள் சிலர் இடம் பெற்றிருந்தார்கள். அதில் இவரும் ஒருவர் முஸ்லிம் வீரர்களுக்கு நீர் அளிப்பதுவீரர்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற சுறுசுறுப்பான பணிகளை செய்தார்.

பின்னர் கைபர், ஹுன்னை யுத்தங்களின் போதும் நபியவர்களுடன் இணைந்து களம் புகுந்தார் உம்மு ஐமன் நாயகி. முத்ஆ யுத்தத்தில் அவர்களது கணவர் ஜைதும், ஹுன்னை யுத்ததில் அவரது மகனும் உயிர்த் தியாகிகள் ஆனார்கள். 70 வயதை எட்டிவிட்ட அவர்கள் அதன் பிறகு பெரும்பாலான காலத்தை வீட்டிலேயே கழித்தார்கள்.  தன் அன்புத்தோழர்கள்  அபூ பகர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும்  உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும் அழைத்துக்கொண்டு நபியவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்து வருவது வழக்கம். 

 நபியவர்கள்  மரணித்தபின் உம்மு அய்மன் நாயகியை நலம் விசாரிக்க சென்றார் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்போது  “வாருங்கள் நாமும் சென்று உம்மு அய்மன் நாயகியை சந்தித்துவிட்டு வருவோம் நபியவர்கள் செய்ததை நாமும் செய்வோம்என்று கூறி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் அழைத்துச் சென்றார்கள்.  

 இவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் அழ ஆரம்பித்துவிட்டார். உம்மு அய்மன் நாயகிஏன் அழுகிறீர்கள்?” அல்லாஹ் தன் தூதருக்கு வாக்களித்துள்ளது சால சிறப்பானதன்றோ!அன்பு நபியவர்களை நினைத்தே அழுகிறாள் என்று நினைத்தார்கள். அவர்கள் ஆனால் காரணம் அதையும் மிகைத்திருந்தது.வானத்திலிருந்து இறங்கும் இறைவேதம் நின்று போய்விட்டதே என்று அறிகிறேன்என்றார்கள்.

பிற்க்காலத்தில் மற்றுமொருமுறை அழுதார்கள் உம்மு அய்மன் நாயகி  உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அழுதிருக்கிறார்கள் என்று அதை பற்றி அவரிடம் மக்கள் விசாரிக்கஇன்று இஸ்லாம் பலவீனமடைந்து விட்டது.என்று என்றார் உம்மு அய்மன் நாயகி. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மீதும் இறைபற்றின் மீதும் அவரது திட உறுதி, புத்திகூர்மை, ஆளுமை மீதும் உள்ளார்ந்த பார்வை இருக்கிறது உம்மு அய்மன் நாயகி 

நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹுவின் ஆட்சியின்போது மரணமடைந்தார்கள்