குர்ஆன் எவ்வாறு இறங்கியது?
நபி (ஸல்) அவர்களின் வாழ்கையில் 40 வருடம் கழிந்த பின்னால் ரமழான் மாதம் 17 இல் முதலாவதாக குர்ஆன் இறங்க ஆரம்பித்து. குர்ஆன் இறங்க முன்பு ஆரம்பமாக நபி ﷺ அவர்கள் சில கனவு கண்டார்கள். அவை காலையில் நபி (ஸல்) அவர்கள் கண்டது போலவே நடந்தது.
பின்னர் நபி ﷺ
அவர்கள் தனிமையை விரும்பினார்கள். மக்கா முகர்ரமாவின்
கிழக்கில், அராபத்துக்குச் செல்வோரின்
இடதுபுறத்தில், "ஜபலுன் நூர் " அல்லது " ஜபலுல் இஸ்லாம்" உச்சியில் 634 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஹிராவின் குகைக்கு தனக்கு தேவையான பொருட்களை எடுத்து சென்று நீண்ட நாட்கள் தங்கி இந்த உலகை படைத்த இறைவனை பற்றி சிந்தித்தார்கள்.
இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் ஜிப்ரீல் (அலை) அவரகள் நபி ﷺ அவர்களின் முன் தோன்றி “இக்ரஉ” (ஓதுவீராக) என்றார்கள் அதற்கு நபி ﷺ அவர்கள் “தனக்கு ஓத தெரியாது" என கூறினார்கள். நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள். 'ஜிப்ரீல் (அலை) அவரகள் என்னை இருக்கி கட்டிபிடித்து பின் விட்டுவிட்டார்கள். மீண்டும் “இக்ரஉ(ஓதுவீராக)” என்றார்கள்.' அதற்கு நபி ﷺ அவர்கள் “தனக்கு ஓத தெரியாது என கூறினார்கள்." மீண்டும் நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஜிப்ரீல் (அலை) அவரகள் என்னை இருக்கி கட்டிபிடித்து பின் விட்டுவிட்டார்கள். மீண்டும் “இக்ரஉ” (ஓதுவீராக) என்றார்கள்.' அதற்கு நபி ﷺ அவர்கள் “தனக்கு ஓத தெரியாது என கூறினார்கள்.' மீண்டும் நபி ﷺ அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஜிப்ரீல் (அலை) அவரகள் என்னை இருக்கி கட்டிபிடித்து பின் விட்டுவிட்டு ஸுரதுல் அலகின் முதல் 5 ஆயத்களை ஓதிகாட்டினார்கள்.' பின் நபி ﷺ அவர்கள் அவசரமாக வீட்டுக்கு சென்று கதீஜா நாயகியிடம் நபி ﷺ அவர்களை போர்த்துமாறு கூறினார்கள். கதீஜா நாயகி நடந்ததை விசாரிக்க நபி ﷺ அவர்கள் நடந்தவற்றை கூரினார்கள்
கதீஜா நாயகி வரகா பின் நவல் அவர்களிடம் விசாரிக்க அவர் ஜிப்ரீல் (அலை) அவரகளை பற்றியும் நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதையும் விளக்கினார்கள்.

0 கருத்துகள்