இமாம் கgஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ்
அவருடைய முழுப் பெயர்:- அபூ ஹாமித்
முஹம்ம்திப்னு முஹம்ம்திப்னு முஹம்ம்திப்னு அஹ்மத் அல் கgஸ்ஸாலி ஆகும். இவரின் பட்டப் பெயர்
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஜய்னுத்தீன் அத்தூஸி ஆகும். இவரின் பெயரான கgஸ்ஸாலி என்பது இவரின் தந்தை “கgஸ்ஸால்” நூல் நூற்பவராக இருந்தார். இவரின்
தந்தையின் தொழிலை இவரின் பெயருடன் இனைத்து “கgஸ்ஸாலி” என்று கூறப்படுகின்றது.
இவர் தூஸ் என்ற ஊரில் ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் (ஹிஜ்ரி : 450) இல் ஒரு பத்தினியான ஒரு தந்தைக்கு பிறந்தார். இவரின் தந்தை அவரின் ஓய்வு நேரங்களில் உலமாக்களின் சபைகளில் உட்கார்ந்து அவர்களின் பாடங்களையும் அவர்களின் உபதேசங்களையும் கேட்பவராக இருந்தார். இதனால் அவர் அல்லாஹ்விடம் அவருக்கு
ஒரு ஆண் குழந்தையை தருமாறும் அந்த குழந்தை இந்த சபைகளில் உட்கார்ந்து படிக்க வேண்டும் என்றும் துஆ செய்தார் . அல்லாஹ் அவருக்கு 2 ஆண் குழந்தைகளை கொடுத்தான்.
ஒருவர் : இமாம் கgஸ்ஸாலி
ரஹிமஹுல்லாஹ்
(மற்றவர் : அஹ்மத் இவரின் புனைப்பெயர் அபுல் பத்தாஹ் அஹ்மதிப்னு முஹம்மதிப்னு முஹம்மதிப்னு அஹ்மத் அத்-தூஸி அல்-கgஸ்ஸாலி ஆகும். ஆகும்.
புனைப்பெயர் மஜ்துத்தீன் ஆகும். இவர் மத்ரஸதுன் நிழாமிய்யாவில்
ஆசிரியராக அவர்களின் சகோதரருக்கு பகரமாக கடமையாற்றினார். இவர் 520…. இறையடி சேர்ந்தார்.)
இவர்களின் தந்தை
மரணத்தருவாயில் அவரின் நேருங்கிய நண்பரை அழைத்து அவரிடம் உள்ள சில செல்வங்களை கொடுத்து அவர் படிக்காமல் விட்டு விட்ட அனைத்தையும் இந்த சிறுவர்கள் படிக்க செலவழிக்குமாரு கூறினார்.
அவர் இறையடி சேர்ந்த பின்னர் அவர் இந்த சிறுவர்களின் கல்வி விடயத்தில் கவனம் செலுத்த அவர் விட்டு சென்றவை தீர்ந்து விட்டது. இதனால் அவ்விருவரின் வாழ்க்கைச் செலவுக்காக மத்ரஸாவில் சேர்த்து விட்டார்.
இமாம் கஸ்ஸாலி
கூறுகின்றார் : நாங்கள் அல்லாஹ் அல்லாத வாழ்க்கை செலவிற்காக இல்மை தேடினேம். ஆனால் அது அல்லாஹ்வுக்காகவே தவிர அது எங்களிடம் வரவில்லை.
இவர் தூஸ் என்ற ஊரில் சிறு வயதில் மார்க்கவிளக்கக் கலையை
கற்றார். பின்னர் ஜுர்ஜான் என்ற ஊருக்குச் சென்று
அங்கு அபூ நஸ்ர் இஸ்மாஈலி என்பவரிடம் கற்றார் பின்னர் அவரது ஊரான தூஸுக்கு வந்து சிறிது காலம் அங்கு இருந்து விட்டு நைஸாபூருக்குச்
சென்றார்.
அங்கு அபுல் மஆலி அல் ஜுவைனி
என்பவரிடம் அவர் இறையடி சேரும் வரை கற்றார். பின்னர் அங்கிருந்து அஸ்கர் என்ற ஊருக்குச் சென்றார். அங்கு உள்ள அரசர் அவருக்கு மத்ரஸதுன் நிழாமிய்யாவின் பொறுப்பை ஒப்படைத்தார்.
488…. இல் பற்றற்ற வாழ்க்கை தேர்வு செய்து அவரின் பொறுப்பை தன் சகோதரனுக்கு கொடுத்து விட்டார். பின்னர் ஷாம் இன்னும் திமிஷ்க் போன்ற ஊர்களுக்கு சென்று சிறிய காலத்தில் அங்கிருந்து வெளியேறி தனது ஊரான தூஸுக்கு வந்து சேர்ந்தார். பின்னர் பல புத்தகங்களை எழுத ஆரம்பித்தார்.
இவர் ஹிஜ்ரி 505 ஜமாதுல் ஆஹிரா 14 திங்கட்கிழமை
அன்று இறையடி சேர்ந்தார்.
இவர் கோர்வை செய்த புத்தகங்கள்
- إحياء علوم الدين
- تهافت الفلاسفة
- الإقتصاد في الإعتقاد
- المنقد من الضلال
- جواهر القران
- ميزان العمل
- المقصد الأسنى
- القسطاط المستقيم
- المستظهرى
- حجة الحق
- مفصل الخلاف
- كيمياء السعادة
- البسيط
- الوسيط
- الوجيز
- المستصفى
- المنخول
- المناخ في علم الجدال
- المقاصد
- مشكاة الأنوار
- معيارالعلم

0 கருத்துகள்